யாழ் நோக்கி நகரும் எழுச்சிப்பேரணி தற்போது பளையில்இணைப்புக்கள்

போராட்டக்களத்திலிருந்து குமணன்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் உறவுகள் எங்கே என அரசை நோக்கி கண்ணீர் மல்க  கோசங்களை எழுப்பி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் இணைந்து கொண்டனர்.

பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்து தமிழ்த் தேசியத்தைக் காக்கும் உரிமைப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம், பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே எம்மை நிம்மதியாக வாழ விடு , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் எனும் விண்ணதிரும் கோசங்களோடு மக்கள் அலை வெள்ளமாய் பரந்தன் நோக்கி நகர்கின்றது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர். இது வரை 7 மாவட்டங்களை கடந்து தற்போது  யாழ் மண்ணை அடைவதற்கான பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது. .

மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு சிங்கள பேரினவாத அரசுக்கும் , பௌதீக மேலாண்மை ஆட்சியாதமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என உரக்க சொல்லும் செய்தியாகவே அறவழி போராட்டம் இறுதி  யாழ் நோக்கி நகர்கின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி  பளை பகுதியை வந்தடைந்தது .   வீறுகொண்டெழுது செல்கின்ற  எழும் பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர்