புதுப்பொலிவு கண்ட போரதீவுப்பற்று.

 

(எருவில் துசி) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இன்று(05) பல நிகழ்வுகள் மக்கள் பணிக்கு வித்திட்டது.வெல்லாவெளி சமூர்த்தி வங்கி மற்றும் மண்டூர் சமூர்த்தி வங்கி என்பன கணணி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் பிரதான நிகழ்வாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளளர் இ.ராகுலநாயகி தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலகம்
புதுப்பொலிவு கண்டது.

போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரச அதிபர் கணபதிப்பிள்னை கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல மக்கள் பயன்படும் நிகழ்வுகள் திறந்துவைக்கப்பட்டன. அந்தவகையில் வெல்லாவெளி சமூர்த்தி
வங்கி மற்றும் மண்டூர் சமூர்த்தி வங்கி என்பன கணணி மயப்படுத்தப்பட்டு மக்கள் சேவை விரைவுபடுத்தும் செயற்பாடுஅரச அதிபர் அவர்களினால் பிரதேச செயலாளர் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

புதுப்பொலிவு கண்ட பிரதேச செயலகமானது திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள்
இவ்வாறு மக்கள் சேவைக்கு மனம்கவரத்தக்க வகையிலும் பயனாளிகள் இலகு சேவையினை அடையக்கூடிய வகையிலும்அத்தனை விடயங்களையும் பிரதிபலிக்கத்தக்கவகையில் உருவாக்குவதற்கு தனக்கு பங்களிப்பு செய்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்பட்டதாரி பயிலுனர்கள் பல்துறை சார் பாயிற்சியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பங்குதாரர்கள் அனைவருக்கும் தனது மானசீகமான
நன்றியை தெரிவித்து நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய அதிதிகள் பிரதேச செயலாளரின் பணிக்கு பல வகையில் உளமாற நன்றி கூறியது மட்டுமல்லாது இ.ராகுலநாயகி அவர்களின் கடமைக்காலம் ஒரு பொற்காலம் என புகழாரம் கூட்டியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரச அதிபர் உரையாற்றுகையில் எருவில் கிராமத்தை பூர்விகமாக கொண்டு பெரியபோரதீவை
வசிப்பிடமாக கொண்ட தனது தந்தை வழி வரலாற்றினை அடிப்படையக வைத்து தனது பதவி உயர்வுக்கு வித்திட்ட உறவுகளையும் தனது வாழ்கையில் தன்னை மற்றவர்கள் இகழ்ந்த சந்தர்ப்பத்தையும் நினைந்து தனது தந்தை ஓவிசராக பணிபுரியும் போது தந்தையுடன் தான் வெல்லாவெளிக்கு வந்து சென்ற பசுமையான சந்தர்ப்பதையும் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

தனது சேவைகாலத்தின் போது கல்வியலாளர்கள் கலைஞர்களை கௌரவிப்பதை விட பாரட்ட வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து
சேவையாற்றியதை கூறியதுடன் தான்பிறந்து வாழ்ந்த மண்ணையும் மக்களையும் நேசித்து நடுநிலையான சிந்தனையாளராக வாழ்தமைக்கு கிடைத்த பரிசாக அரச அதிபர் பதவி தனக்கு கிடைத்ததாகவும் தன்னை பலர் புடைசூழ
கௌரவித்து அழைத்து வரும்போது கடந்த கால பணிகள் நினைவுக்கு வந்ததாகவும் கருத்தரைத்தார். தான் அரச அதிபராக பதவி  ஏற்கும் தனது அம்மாவை அருகில்
வைத்து பதவி ஏற்றதாகவும் அப்பாவின் ஆன்மா அதனை ஆட்கொண்டிருக்கும் என்கின்ற தெணியிலும் கருத்துரையாற்றினாhர்.

பிரதேச செயலகம் தொடர்பாக கருத்துரையாற்றும் போது தான் வெல்லாவெளியில் கடமையாற்றிய போது கண்ட பிரதேச செயலகத்தை விட இ.ராகுலநாயகி அவர்களின் சேவைக்காலம் ஒரு போரதீவுப் பற்றுக்கு எழுச்சிக்காலம் என புகழாரம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் சமூர்த்தி பணிப்பாளர், பொறியியலாளர், கணக்காளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் போரதீவுப்பற்று கணக்காளர் முன்னால் கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் பதவி வழி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.