மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் 73வது சுதந்திர தின நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் 73வது சுதந்திர தின நிகழ்வு இன்று(4) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிகழ்வு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து மரக்கன்றுகளும் நடுகை செய்தனர்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.