கொட்டும் மழையிலும் தொடங்கியது போராட்டம.

சண்முகம் தவசீலன்

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது   சற்றுமுன்னர் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்த் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது