கொரோனா தடுப்பூசி செலுத்தும்  விடயத்தில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

கொரோனா தடுப்பூசி செலுத்தும்  விடயத்தில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தகவல்களை வழங்கும் விடயத்தில் ஊடகவியலாளர்கள் தயக்கமின்றி கொரோனா காலத்திலும் பணியாற்றி வருவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LNW