2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் கடும் அநிநிதிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்

(கமல்)

2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் கடும் அநிநிதிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் யோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்ää முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாääபா.அரியநேத்திரன்ää ஸ்ரீநேசன். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசாää மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன்  மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள்ää பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலுந்து கொண்டனர் இந் நிகழ்வில் இவரும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்க தொடர்ந்து உரையாற்றுகையில்

எமது பிரதேசம் தற்போது படும் இன்னல்களை நாங்கள் அறிந்த வண்ணவே இருக்கின்றோம். தற்போது வடகிழக்கிலே கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அடிமைகளாக இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்தப்பட்டதன் காரணமாக இந்த நாடு பல போராட்டங்களை சந்தித்து வந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் கடும் அநிநிதிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு வேண்டி வெளி உலகத்திற்கு எடுத்துக் கூறப்பட வேண்டும். குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமை பேரவைக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருப்பதால் எமது பிரச்சினையை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் முகமாக பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை மாபெரும் பேரணி ஒன்றினை நடாத்துவதற்கான வடகிழக்கு சிவில் சமூகத்தின் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க இருக்கின்றது.

ஏதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவிலே கொண்டுவர இருக்கும் பிரச்சினை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும் என்பது எமது அவாவாக இருக்கின்றது. இதனை அறிந்த கோட்டபாய ராஜபக்ச மூவர் கொண்ட குழுவினை நியமித்திருக்கின்றார். கடந்த காலங்களிலே இங்கு தமிழர்களுக்கு நடந்த அட்டூளியங்களை கண்டறிவதற்கான ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது நடைபெற்ற அநியாங்களை கண்டறிவதற்கு அவரே ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இந்த செயற்பாடு என்பது இந்த நாட்டு மக்களையல்ல ஐக்கிய நாடுகள் சபையைக் கூட ஏமாற்றும் வித்தையாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

அதற்கு மேலாக அவரும் அவருடன் இருக்கும் அமைச்சர்களும் என்ன கூறுகின்றனர் அன்நிய சக்திகள் ஒரு நாட்டின் இறைமைக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது விரலை நுழைக்கக் கூடாது என்றெல்லாம் கூறிவருகின்றனர். நீங்கள் இந்த நாட்டிலே இருக்கின்ற சிறுபான்மை இனமான தமிழ் பேசும் சமூகத்திற்கு இழைக்கின்ற இன்னல்களுக்கா சர்வதேசம்  மூக்கையல்ல முழு உடலையே நுழைக்கும்; அளவிற்குதான் நீங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். என்பதனை நீங்கள் உணர வேண்டும். ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த நீங்கள் தொடர்ந்து போராடிவரும் எமது இனத்திற்காக நீங்கள் மக்ளளது அபிலாசைகளை வெல்லக் கூடிதொரு தீர்வினை உங்களால் கொடுக்க முடியும். காரணம் பாராளுமன்றத்தில் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது முழு அதிகாரத்தையும் நீங்கள் இருபதாவது திருத்தச்சட்டத்தின் மூலம் பெற்றிருக்கின்றீர்கள்.  ஆகவே உங்களால் தமிழ் மக்களுக்குரிய நியாயமான தீர்வினை வழங்க முடியும். அவ்வாறு வழங்கிவிட்டு சர்வதேசத்திடம் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கூறுங்கள் அவர்களும் மூக்கை நுழைக்கமாட்டார்கள்.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு வடக்கு கிழக்கு பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எல்லையோரங்களில் இருக்கும் காணிகள் அனைத்தும் கபளிகரம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த நேரத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடந்த காலங்களிடையே தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளிடையே குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது அவை அனைத்தையும் மறந்து எமது எதர் காலத்தில் ஒற்றமையாக ஜனநாயக ரீதியில் இராஜதந்திர ரீதியில் போராடி எமது மக்களுக்குரிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இதன்போது தெரிவித்தார்

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????