திருகோணமலை மாவட்ட திரி சாரணர் குழுவில் புதிதாக இணைந்து கொண்ட 13 வான் சாரணர்களுக்கு அங்கத்துவம் சூட்டி வைக்கப்பட்டது. திங்கட்கிழமை 2021.02.01 மாலை புனித சூசையப்பர் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட திரிசாரணர் தலைவரும் உதவி மாவட்ட ஆணையாளர் நிகழ்ச்சியுமான இ.சத்தியராஜன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சி.சசிகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது வான் சாரணர் என்ற பெருமையை சௌந்தர்ராஜன் டக்சன் பெற்றுக்கொண்டார்.