மட்டக்களப்பில் 2632 பேர் , திருகோணமலையில் 1110 தடுப்பூசி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பில் 2632 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 2632 சுகாதார முன்னிலை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி  ஏற்றப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இத்தடுப்பூசிகள் 18 சுகாதார வைத்திய அதிகாரிபிரிவுகளிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் கடமையாற்றும்  சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தரவுகளின்படி மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை1240, களுவாஞ்சிக்குடி170, வாழைச்சேனை 139, காத்தான்குடி56  ஏறாவூர் 50 ,வாகரை 54 ,வாழைச்சேனை 20, ஓட்டமாவடி 50, கோறளைப்பற்று மத்தி 20, கிரான் 40 ,செங்கலடி 110, ஏறாவூர் 30, மட்டக்களப்பு 230, காத்தான்குடி 20, களுவாஞ்சிக்குடி 110,, வெல்லாவெளி 70 வவுணதீவு 63, பட்டிப்பளை  60 ,ஆரையம்பதி 100   ஏற்றப்பட்டுள்ளதாக அலர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை

திருகோணமலையில் 1110 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

  திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக 12 சுகாதாரவைத்தியஅதிகாரிபிரிவுகளிலும், திருமலை பொதுவைத்தியசாலையிலும் கடமையாற்றும்  சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட 1110 பேருக்கு கொவிட் தடுப்பூசி  ஏற்றப்பட்டுள்ளதாக பிராந்திய தொற்றுநோயியல் வைத்தியநிபுணர் டாக்டர் த.நிலோஜன் தெரிவித்தார்.

தரவுகளின்படி  திருகோணமலை180, உப்புவெளி 50, குச்சவெளி 50, கோமரங்கடவெல 50, பதவிசிறிபுர40, தம்பலகாமம் 50,  கந்தளாய்    (ஆதாரவைத்தியசரலை உட்பட) 220,               கிண்ணியா (ஆதாரவைத்தியசாலை உட்பட) 80, குறிஞ்சாக்கேணி 30, மூதூர் (ஆதாரவைத்தியசாலை உட்பட)120 , ஈச்சலம்பற்று 30 , பொதுவைத்தியசாலை 190 என அவர் மேலும் தெரிவித்தார்.