மட்டு.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்கின்றன

ரீ.எல்.ஜவ்பர்கான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் இன்று காலை தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறறன.

.மட்டக்களப்பு  சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில்பொது சுகாதார பரிசோதகர்கள் வைத்தியர்கள் தாதியர்களுக்கும்  தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக்கப்பட்ட பல பிரிவுகள் அடங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 600 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.