அரசியல் வேட்டைக்கு அரசியல் பழிவாங்கலை விசாரிக்க  “சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

முன்னாள்ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப்போல் தற்போதைய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ  அரசியல் பழிவாங்கலை விசாரிக்க  “சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை” நியமிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு நீதிபதியும் உள்ளனர். தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதே போன்தொரு ஆணைக்குழு ஊடாகவே முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

அரசியல் வேட்டைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பயன்படுத்திய அதே சட்டத்தை தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தவுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த ஆணைக்குழுவானது குடியியல் உரிமைகளைப் பறிக்கும் பரிந்துரைகளை முன்வைக்கக்கூடிய விசேட அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவாகும்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, இலக்கம் 8,9,10 ஆகியவற்றுக்கான தீர்மானங்களை எடுக்கும் பரிந்துரைகளை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்வைக்க முடியும்.

அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படுமாயின், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அக்கூட்டமைப்பின் மற்றுமோர் எம்.பியான எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றவாளிகளாக்கப்படுவர்.