மட்டக்களப்பில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கல்

ரீ.எல்.ஜவ்பர்கான்-
ஜனாதிபதியின் வழிகாட்டலில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(30)மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  46 பட்டதாரி பயிலுனர்களுக்கு 100 நாள் பயிற்சி காலத்திற்கான நியமனங்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது .
மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா  மண்டபத்தில் நடைபெற்ற நியமனங்கள் வழங்கும் நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர்  திருமதி  எல் . பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்