காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இந்தியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட கொவிட் 19 தடுப்பூசி காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு ஏற்றும் ஆரம்ப நிகழ்வு இன்று 31 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் உதவிப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆஸாத் ஹஸன் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள்,தாதியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,சாரதிகள்,ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவினர் சுமார் 20 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்து போத்தலிலுள்ள மருந்தை 10 பேருக்கு ஏற்ற முடியும் என்பதோடு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினர்களுக்கு ஏற்றுவதற்கு 5 கொவிட் 19 தடுப்பு மருந்து போத்தல்கள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது