மூதூர் பிரதேசத்தில் உள்ள ஆதிக்குடிகளின் நீண்ட காலமாக நிலவும் காணி பிணக்கு தொடர்பான கலந்துரையாடல்

பொன்ஆனந்தம்

மூதூர் பிரதேசத்தில் உள்ள ஆதிக்குடிகளின் நீண்ட காலமாக நிலவும் காணி பிணக்கு தொடர்பான கலந்துரையாடல் நேற்று  மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் ஆதிக்குடிகளின் பிரதிநிதிகள், விவசாய சம்மேளனங்களி ன் பிரதிநிதிகள் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு  இவ்விடயம் தொடர்பாக விவாதித்தனர்
மூதூர் பிரதேசத்தின் உல்லைக்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் தமது காணிகளில் பலர் ஆடத்தாக பிடித்து செய்கை பண்ணிவருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வக்கப்பட்டு
 வந்த நிலையில்  நேற்றைய தினம் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
இந்நிலையில் குறித்தகுற்றச்சாட்டு தொடர்பான காணி களுக்கான ஆவணங்களை சேகரித்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என ஆதிக்குடிகளின் சங்க பிரதிநிதி வரதன் தெரிவித்தார்
இருபிரிவினரும் ஆவணங்கள் சமர்பிக்கும் பட்சத்தில் ஆவணங்களின் உண்மைத்தன்மையை தொடர்பாகவும் ஆராயப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் இதுபற்றி ஆராயப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.