பொன்ஆனந்தம்
மூதூர், சுகாதார அதிகாரி களுக்கு இன்றைய தினம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
Oxford பல்கலைகழகமும், AstraZeneca நிறுவனமும் இனைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட( Covishield Vaccine) தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது விலை குறைந்ததாகவும்,பாதுகாத்து வைப்பதில்(2°C – 8°C) நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமையாலும் வழங்கப்படுகின்றது.
இந்திய தயாரிப்பான Covishield Vaccine கள் கொரோனா Virus இற்கு எதிராக செயற்படும் அளவு 62% to 90% மாக காணப்படுகின்றது.
நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று 2021.01.30 மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதார பணியாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனாவிற்கான தடுப்பூசி (COVIDSHIELD) ஏற்றும் நிகழ்வு
மூதூர்தள வைத்தியசாலையில் இடம் பெற்றது. இதன் போது மூதூர் தளவைத்திய சாலை சுகாதார அத்தியட்சகர் உள்ளிட்ட, தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கும் ஊசிகள் போடப்பட்டன.
இத்தடுப்பூசிகள்
1-கர்ப்பினி பெண்களுக்கும்,பாலூட்டும் தாய்மார்களுக்கும்
2- மூன்று மாதங்களுக்குள் கர்ப்பம்தரிக்க உள்ளவர்கள்.
3-மருந்துகளின் மூலம் அதிக ஒவ்வாமை ஏற்படுகின்றவர்கள்.
4- 18 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்
5- 14 நாட்களுக்குள் COVID தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டவர்கள்.
6- குருதி உறையா நோய்உள்ளவர்கள்.
7-14 நாட்களுக்குள் வேறு தடுப்புமருந்தேற்றியவர்கள். போன்றவர்களுக்கு ஏற்றக்கூடாது.
இத்தடுப்பு மருந்து வழங்கும் போது வைரஸ் கொல்லப்படாமல் இருப்பினும் நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். எனவே மேற்கூறப்பட்ட தவிர்க்க வேண்டிய நபர்கள் தவிர ஏனைய அனைவருக்கும் வரும் காலங்களில் தடுப்புமருந்து வழங்கும் போது தவிர்க்காமல் பெற்றுக்கொள்ளும் போதே முன்னர் ஒழிக்கப்பட்ட ஒரு சில தொற்று நோய்கள் போன்று இந்த COVID நோயையும் ஒழிக்க முடியும் அதிகாரி கள் தெரிவித்தனர்.


