வாழைச்சேனையில் சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீவ் சஞ்ஜீவ்வுக்கு முதல் தடுப்பூசி.

அனுருத்தன்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவகத்தில் கடமையாற்றும் வைத்தியர்கள்,சுகாதார சேவை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் 1990 இலக்க சுகப்படுத்தும் சேவை பிரிவினர் ஆகியோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு கொவிட்ஷில்ட் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்றது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீவ் சஞ்ஜீவ் முதல் கொரோனா தடுப்பூசியினை முன்மாதிரியாக ஏற்றி ஆரம்ப்பித்து வைத்தார்.
  அதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றும் 24 சுகாதார சேவைகள் உத்தியோகஸ்த்தர்கள் மருத்துவ மாதுகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏற்றிக்கொண்டனர்.
எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் முன் வந்து இவ் கொரோனா தடுப்பூசியினை ஏற்றி கொரோனா நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீவ் சஞ்ஜீவ் பிரதேச மக்களை கேட்டுக்கொண்டார்.