திருகோணமலையில் தடுப்பூசி.

கதிரவன்

திருகோணமலையில் இன்று தொழிற் தடுப்பு ஊசி மருந்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருத்ரா தலைமையில் 40 ஊழியர்களுக்கு இது செலுத்தப்பட்டது.
இங்கு பொது சுகாதார பரிசோதகர் தே.தவராஜசேகரம் முதலாவது ஊசிமருந்தினை ஏற்றிக்கொண்டார்.

திருகோணமலை நகர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 240 பேருக்கு தடுப்பு ஊசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் தடுப்பு ஊசியினை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ச.சயனொளிபவன் ஏற்றிக்கொண்டார்.