மன்னாருக்கு 1280 கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்துகள் மருந்து ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் சனிக்கிழமை (30.01.2021) ஆரம்பமாகியுள்ளது. இதில் முதலாவது தடுப்பூசி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது பணியாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் சேவையை கௌரவித்து இவ் தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வாக இது அமைவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கு இதுவரைக்கும் 1280 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவைகள் முதலில் அனைத்து சுகாதார சேவைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மன்னாருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் முதலாவது ஊசி மன்னார் வைத்திய அதிகாரி பிரிவின் தலைமை பொது சுகாதார பரிசோதகர் வின்சென்ட் என்பவருக்கு போடப்பட்டதாகவும் தொடர்ந்து ஏனையவர்களுக்கு இன்றுமுதல் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த புதன் கிழமை (27) மன்னார் பேரூந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட 208 பேரூக்கான பி.சி.ஆர்.பரிசோதனை மாதிரிகளில் ஒரு பொலிஸ் அதிகாரி தவிர ஏனைவர்களுக்கு தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்

இதுவரைக்கும் ஜனவரி மாதம் மட்டும் (2021.01) 163 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மன்னாரில் இதுவரை மொத்தமாக 180 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்ததாகவும் 3800 பேர் அளவில் பி.சி.ஆர். மாதிரி பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்