கிழக்கில் முதல் கொவிட்-19 தடுப்பூசி கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு

(கனகராசா சரவணன் )
 கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரனுக்கு முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டு சுகாதார துறையினருக்கு தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை  இன்று சனிக்கிழமை (30) மட்டக்களப்பு  சுகாதார வைத்தியர் அதிகாரி பணிமனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 400 சுகாதார துறையினருக்கு இன்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது