தடுப்பூசி முன்னிலை பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோவிட் தடுப்பூசியை வழங்குவதில் அரசியல்வாதிகள் முன்னணியில் இல்லை என்று இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியலின் படி 60 வயதுக்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அவர்களில் இருக்கக்கூடும் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்..