சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படக்கூடும்

கரு ஜயசூரிய

இலங்கை எடுக்கும் சில கடுமையான முடிவுகள் காரணமாக சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படக்கூடும் என முன்னாள் சபாநாயகரும் நியாயமான சமூகத்திற்கான இயக்கத்தின் தலைவருமாகிய கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் எதிர்த்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்களே இன்று நம்பிக்கை இழந்து வருவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதியில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம், சிகரெட் கம்பனி ஒன்றுக்கு அரச வங்கியால் வழங்கப்பட்ட கடன் என்பவற்றை குறைத்து மதிப்பிட முடியாது என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்

LNW