முல்லைத்தீவில் வெடிக்காத நிலையில் அதிகளவான மோட்டார் குண்டுகள்

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலையில் கடந்த 25 ஆம் திகதி  மைதான துப்பரவு பணியின் போது வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இன்னிலையில் குறித்த மோட்டார் குண்டுகள் மேலும் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அவற்றை தோண்டும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட படையினர் 28.01.21 அன்று பொலீசார் படையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது வெடிக்காத நிலையில் அதிகளவான மோட்டார் குண்டுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டுள்ளன.