நகரை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரை பிரதேசமானது சுத்தம் செய்யப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நகரை தூய்மைப்படுத்திஇ அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (28) காலை கல்லடி கடற்கரை பிரதேசமானது சுத்தம்செய்யப்பட்டது.

குறிப்பாக கடற்கரையினை அண்டிய பிரதேசங்களில் வீசப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக்போத்தல்கள் வெற்று மது போத்தல்கள் போன்றவை கடலோரப் பகுதிகளில் இருந்துசுத்தப்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இப்பணிகளில் கடல்மாசுறல் தடுப்பு அதிகார சபையினர் ரொட்டறி கழகம் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர்சம்மேளனத்தினர்இ ஹெல்ப் எவர் தொண்டர்கள்இ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்மற்றும் மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா உள்ளிட்ட மாநகர சபையின் சகாதார பிரிவின்உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கடற்கரை சுத்தமானது கடற்கரை மற்றும் கடல் வளங்களின் மதிப்பை உணர்ந்துகொள்வதற்கான பொது மக்களின் மனோபாவத்தை உருவாக்குவதற்கும்  கடற்கரை சுத்தத்திற்கானசமூக பங்களிப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.