தைபூச விஷேட நாளில் இல்லங்களில் புதிர் எடுத்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது

(வவுணதீவு எஸ்.சதீஸ் )
இந்துக்களின் தைபூச விஷேட நாளில் வயல்களில் விளைந்த நெல்லினை வீட்டின் வழிபாட்டு அறையில் வைத்து வழிபடுதல் மற்றும் இத்தினத்தில் அந் நெல்லினை அரிசியாக்கி முதன் முதலில் சமைத்து உண்ணுதல் புதிர் எடுத்தல் எனப்படும் பண்டிகையாகும்.

இத்தினமான  வியாழக்கிழமை (28ம் திகதி) மட்டக்களப்பில் பல இடங்களிலும் இந்து மக்கள் தமது இல்லங்களில் புதிர் எடுத்தல் நிகழ்வினை காணமுடிந்தது.
இதன்போது மஞ்சள், தானியங்கள், தங்கம், பணம், வெற்றிலை பாக்கு பழம் போன்றவைகளுடன் நெற்கதிரை வைத்து புதிர் எடுப்பது சம்பிரதாயமான முறையாக மக்களிடையே உள்ளமை குறிப்பிடத்தக்கது