தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விளக்கேற்றி வேண்டுதல்’..!

ஹஸ்பர் ஏ ஹலீம்_
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல பிரதேசங்களில் ‘ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விளக்கேற்றி வேண்டுதல்  நேற்றைய தினம் (26) இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு
கிழக்கு மாகாணத்திலுள்ள  திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  ஆகிய  மாவட்களிலுள்ள பல இடங்களில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை பல வருடங்களாக இரும்புக் கம்பிகளின் பின்னால் கழித்து வயது மூப்பை அடைந்துள்ளதோடு நோயாளிகளாயும் ஆகியுள்ளனர்.
இவ்வாறு  பல ஆண்டுகளாக  பல துன்பங்களை எதிர்கொண்டுவரும் சிறைகளில் உள்ள எமது உறவுகள் மிக விரைவில் அவர்களது உறவுகளுடன் வந்து சேர வேண்டும் எனக் கோரியதான வேண்டுதல்களையும் வேண்டி நிண்டனர்.