பேசாலையில் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Corona virus test kit - Swab sample for PCR DNA testing
( வாஸ் கூஞ்ஞ)
பேசாலை பகுதியில் ஒரு ஆலயத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களில் கொரோனா 19 தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன

கடந்த சில தினங்களுக்கு முன் பேசாலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இவ் வருடத்துக்கான திட்டமாநாடு இடம்பெற்றது
இவ் மாநாட்டில் 120 நபர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவருக்கு கொரோனா 19 தொற்றுநோய் பீடித்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சுய தனிமையில் இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டிருந்தனர்
இந்த நிலையில் இது சம்பந்தமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இதில் தொடர்புடையோருக்கு மேலும் ஜந்து நபர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பீடிதுதிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் ஆலய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நேற்று வியாழக்கிழமை (28) பேசாலையில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்தது.
பேசாலையில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது