அட்டாளைச்சேனையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)

சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளருமான எம். ஏ.சி முஹம்மது றியாஸ் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல் முஹம்மது காசிம், விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. சி. கஸ்ஸாலி உட்பட உதவி கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் கல்விமான்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பதக்கம் என்பன வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இருந்து கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 69 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் வலயத்தில் முதல்முறையாக பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியான மாணவி  நசுருதீன் பாத்திமா அபாமா (112) என்ற மாணவி மற்றும் பிரதேசத்தில் 184 புள்ளி பெற்று முதல் நிலை பெற்ற அட்டாளைச்சேனை முனீரா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி முஹம்மது றிபாயத்துல்லாஹ் சாபிக் சய்னி ஆகியோரும்  அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பெற்றோர்கள், ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.