கொரோனா – அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(க.கிஷாந்தன்)

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முன்னதாக தரம் 9  இல் கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவக்கு கடந்த வாரம் தொற்று உறுதியானதையடுத்து அவரது வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் முதற்கட்டமாக 7 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகள் அறிக்கைகளின் பிரகாரம் அவர்கள் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கான அறிக்கைகள் இது வரை கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை தொற்று உறுதியான இரண்டு மாணவர்களின் சகோதரர்கள் இருவருக்கும்    தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இதே பிரதேசத்தின் மற்றுமொரு பாடசாலையில் கல்வி கற்று வருபவர்களாவர். அதன் படி மொத்தமாக 11 மாணவர்களுக்கும் இரண்டு ஆசிரியர்களுக்குமே 27.01.2021 அன்று வெளிவந்த பி.சீ.ஆர் அறிக்கைகளின் படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.