உலக வங்கியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவருத்தி திட்டத்திற்கு விவசாயிகளினால் விவசாய செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து முன்மொழியுமாறு கோரப்பட்டிருந்தது.
எனவே பல விவசாயிகள் செயற்றிட்டங்களை தயாரித்து விண்ணப்பித்திருந்தனர். இவ் விவசாய செயற்றிட்டத்தினை முன்வைத்த விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று(27) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இம் செயற்றிட்டத்தினை எவ்வாறு தயாரிப்பது இச் செயற்றிடங்களில் உள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பாக மிகவும் விரிவான முறையில் கலந்துகொண்ட ஒவ்வொரு விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.