கமல்
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவமொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரவுண் ஏசி வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதே திசையில் முன்னோக்கி பெண்ணொருவர் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய நிலையில் வீதியருகே பொருத்தப்பட்டிருந்த ” அதிகவேகம் ஆபத்து உயிர் பெறுமதியானது” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையையும் அடித்துத் தள்ளிய நிலையில் வேனின் வேகம் தணிந்துள்ளது.