மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு கீழ் கைக்குண்டு மீட்பு

( கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில்  திங்கட்கிழமை (25) காலை கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனா்.