கொக்கட்டிச்சோலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தொழில் நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்து நபர் கடந்த 14.01.2021 அன்று வீடு திரும்பியிருந்த நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தமையினால் அவருடைய வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 23.01.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று கரடியனாறு தனிமைப்படுத்தல் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.