இரு கல்வியாளர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு

கலாநிதி கெஹான் குணதிலக மற்றும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி நைஜெல் ஹெட்ச் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து எதிர்கட்தித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக செயற்பட முன்வந்துள்ளனர்.

வௌிவிவகார அமைச்சின் முன்னாள் ஆலோசகராக செயற்பட்ட கெஹான் குணதிலக்க தென்னாசி சட்ட மத்திய நிலையத்தின் உறுப்பினராகவும் மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பெப்ரல் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி நைஜெல் ஹெட்ச் தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில் ஆலோசனை சபை உறுப்பினராக செயற்பட்டவர். அத்துடன் இலங்கை சட்டக் கல்லூரியின் பதில் அதிபராகவும் செயற்பட்டதுடன் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

LNW