கோஷ்டி மோதலால் ஒரு கிராமம் அச்சநிலை. மன்னாரில் சம்பவம்.

(வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் நகரில் இளைஞர்கள் மத்தியில் மது போதையினால் ஏற்பட்ட பழைய பிரச்சனையின் எதிரொலியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் ஆண்களை ஆயுதமுனைகள் கொண்டு தாக்குதல் நடாத்திய சம்பவத்தால் ஒரு கிராமம் அல்லோலகல்லோமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாதிப்டைந்தவர்கள் நீதிகோரி மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி வாசஸ்தலத்துக்கு முன்னால் குழுமியதும் பொலிசார் இவர்களை அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இவ் சம்பவம் ஞாயிற்றுக் கிழமை (24.01.2021) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு நான்கு கிராமத்து இளைஞர்கள் கூட்டம் ஒன்று சாவக்கட்டு இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும்

பின் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17.01.2021) மீண்டும் இவ் இளைஞர் கோஷ்டினர் மது போதையில் மீண்டும் சாவக்கட்டு இளைஞர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும். இது தொடார்பாக மன்னார் பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றம் புரிந்ததாக தெரிவிக்கப்படும் நபர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மீண்டும்  இவ் இளைஞர் கோஷ்டினர் சுமார் பத்து மோட்டர் சைக்கிள்களில் முகக் கவசத்துடனும் ஹெல்மட் அணிந்து வந்து மன்னார் சாவகட்டுக் கிராமத்துக்குள் ஞாயிற்றுக் கிழமை (24) உட்புகுந்து ஆண் பெண் என்று பாராது பரவலான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதனால் பெண் உட்பட இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாவகட்டுக் கிராமம் அச்சத்தின் காரணமாக அல்லோலகல்லோல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவ் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் சம்பவத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பும் இவ் இனம் தெரியாத கோஷ்டினர் சாவக்கட்டு கிராமத்தைச் சார்ந்தவர்களை காணும்போது அவர்கள் மீது தாக்குதல் நடாத்திச் செல்வதாகவும் பொலிசாரிடம் முறையீடு செய்யப்படும்போது தாக்குதல் நடாத்துபவர்களை இனம் காட்ட முடியாமையால் பொலிசாரும் சரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் இருந்ததாக தெரியவருகின்றது.

இந்த நிலையிலேயே ஞாயிற்றுக் கிழமை (24) இவ் சம்பவம் தொடர் சம்பவமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மன்னார் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)
(படம்) பாதிப்படைந்த சாவகட்டு கிராம மக்கள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை (24) இரவு 7.30 மணியளவில் நீதிகோரி வீதியில் அமர்ந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம்.