அரசடி கிராமசேவையாளர் பிரிவில் சிலவீதிகள் இன்று விடுவிப்பு.

மட்டக்களப்பு நகரப்பகுதியில் கடந்த 16ம் திகதி முடக்கப்பட்ட அரசடி கிராமசேவையாளர் பிரிவில் சிலவீதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசடிப்பிள்ளையார் கோவில்வீதி,  மூர்வீதி என்பன தொடர்ந்து முடக்கப்பட்டு கண்காணித்துவருவதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்..

இதேவேளை இன்றுடன் மட்டுமாவட்டத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 555ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24மணித்தியாலயத்தில்17பேர் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களில் 14பேர் மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவைசேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர்கள் காத்தான்குடி வெல்லாவெளி மட்டுபோதனாவைத்தியசாலையின் உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.