திருமலை பராமரிப்பில்லாமல் உள்ள காணிகளில் பற்றைக்காடுகள் .நகரசபை அதிரடி நடவடிக்கை 

பொன்ஆனந்தம் 
திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுகின்ற காணிகளினால்   பொது ச்சுகாதார த்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக திருகோணமலை நகரசபை த்தலைவர் இ. ராசநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலத்தில் பெய்த மழையின் பின்னர் பராமரிப்பற்ற அக்காணிகளிலிருந்து டெங்கு நுளம்பு உண்டாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.
 மேலும் இவ்வாறான காணியிலிருந்து 5 அடி நீளமான புடையன் பாம்பொன்றை அக்காணியிலிருந்து பிடித்து நகராட்சிமன்றத்திற்கு கொண்டு வந்து காட்டியுள்ளார் கள்.
எனவே, இவ்வாறான ஒரு காணியிலிருந்து உடன் துப்பரவு செய்யும்படி அக்காணிகளில் அறிவித்தல் பலகை நகராட்சிமன்றத்தால் இடப்பட்டு வருகின்றது.
அறிவித்தல் பலகை பொருத்தப்பட்ட நாளிலிருந்து இருவாரங்களுக்குள் அக்காணிகள் துப்பரவு செய்யப்படாதவிடத்து அக்காணிகள் நகரசபையால் துப்பரவு செய்யப்பட்டு அதன் செலவீனத்தை உரிமையாளரிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவும் தலைவர் தெரிவித்துள்ளார்.