பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 31பேர் தனிமைப்படுத்தலில். செயலகம் வழமைபோல் இயங்கும்.

  வேதாந்தி

மட்டக்களப்பு படடிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவையாளர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளானதையடுத்து பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவையாளர்கள், சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என 31பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் பிரதேச செயலகம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்காக திறந்திருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் மாவட்டத்தின் பலபாகங்களைச்சேர்ந்தவர்கள் என பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவில்05,  மகிழடித்தீவு சுகாதாரப்பிரிவு 15, ஆரையம்பதி சுகாதாரப்பிரிவு 03, களுவாஞ்சிக்குடி 05, வெல்லாவெளி01 ,வவுணதீவு சுகாதாரப்பிரிவு 02  போன்ற பிரதேசங்களைச்சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.