காத்தான்குடியில் விடுவிக்கப்படாத பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவும்-

பாடசாலைகள் பள்ளிவாயல்கள் திறக்க முடியாது
—-காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி

ரீ.எல்.ஜவ்பர்கான்–

காத்தான்குடியில்  விடுவிக்கப்படாத பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் பள்ளிவாயல்கள் ஏனைய பகுதிகளைம் விடுவிக்கும் வரை திறக்க முடியாது என ஊடகவியலாளர் சந்திப்பில்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.டு.ஆ. நபீல் தெரிவித்தார்.மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனும்  இதில் கலந்து கொண்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த  இவர்கள்  மக்கள் கடந்த நாட்களில் தந்த அதே ஒத்துழைப்பை தொடர்ந்து தருமாறும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மரக்கறிக் கடைகள்  சில்லறைக் கடைகள் மாட்டிறைச்சி மற்றும் கோழி கடைகள்  மருந்தகங்கள் திறப்பதற்காக  காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் ஊடாக அனுமதியைப் பெற்று அண்டிஜன் பரிசோதனையை அடுத்து இவைகளை சுகாதார நடைமுறைப் பேணி திறந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர். இதனை மீறுகின்ற  வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பாடசாலைகள் பள்ளிவாயல்கள் மதரசாக்கள்  தனியார் வகுப்புகள் போன்றவைகள் எக்காரணம் கொண்டும் திறக்கப்பட மாட்டாது என்றும் அதேபோன்று  மேற்படி வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை திறக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்

பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியம் என்றும் குறிப்பிட்டனர்

பொதுமக்கள் ஏற்கனவே தந்த ஒத்துழைப்புக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்