மட்டக்களப்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 503.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை503 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தரவுகளின்படி காத்தான்குடியில் 09 ,மட்டக்களப்பு 04 ,செங்கலடி 02 ,வெல்லாவெளி 01 என தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

தொற்றாளர்களில்238பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.