ஏ.எல்.எம்.அதாஉல்லா இனவாதமற்ற தலைவர்.ஏ.எல்.எம்.பாறூக்

(இஸ்ஸதீன் ஏ.ஸிறாஜ்)
முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தைரியமாக குரல் கொடுக்கவில்லை என்ற கருத்து முழுப்பூஸணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற கதையாகும். என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை  பரப்புச்; செயலாளரும் கட்சியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.பாறூக் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.பதுறுதீன் அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்ட பின்னர்  கடந்த 13ம் திகதி அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தேசிய காங்கிரஸ்  கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சனிக்கிழமை (16) மாலை பாலமுனை தேசிய காங்கிரஸ் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில

முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தைரியமாக குரல் கொடுக்கவில்லை என்ற கருத்து முழுப்பூஸணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற கதையாகும். ஏனென்றால் எமது கட்சியின் தலைமை முஸ்லிம் சமூகம் சார்ந்த ஜனாஸா எரிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமாணிக்கு எதிராக தனி நபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் விரைவில் கொண்டுவர இருக்கின்றார். அதற்கு பக்கபலமாக அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அது மாத்திரமன்றி எமது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் உரத்துக் கூறியுள்ளார். சமூகத்துக்காக நிறையவே சேவை செய்துள்ளார். அவர் இனவாதமற்ற தலைவர். எனவே அவைகளை சமூகவலத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளிக் காட்டி அரசியல் இலாபம் அடைந்து கொள்ளும் நோக்கம் எமது கட்சியின் தலைமைக்கு இல்லை. எமது சமூகத்தின் மற்றய அரசியல் தலைமைகள் போன்று  சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு நாளில் தீர்வு காண முனைய முடியாது. அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்து விட்டு மக்களை உசுப்பேற்றிவிட்டு மக்களுக்கு சிலுசிலுப்பு காட்டிவிட்டு ஊடகங்களில் முகத்தை காட்டிவிட்டு அதில் குளிர் காய நிணைக்கும் தலைமையும் அல்ல. எமது தேசிய காங்கிரஸ் தலைமைத்துவம். எனவேதான் பாராளுமன்றம் என்பது இந்த நாட்டின் உயர்சபை ஜனாதிபதி என்பது இந்த நாட்டின் உச்ச தலைவன். எனவே அவரோடு கலந்து பேசி நேரடியாக தீர்வு காண்பதுதான் தலைமைகள் செய்ய வேண்டிய விடயம். எமது கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த விடயங்களை நிதானமாக பேசி வருகின்றது. அதனை குழப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு ஒரு சில அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர்.  தேசிய காங்கிரஸ் தலைமை மர்ஹ_ம் அஸ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சமூகம் தொடர்பான விடயம் சார்ந்த பணியை மேற்கொண்டு வருகின்றார். இதில் யாரும் குறைகாண முனைவது முட்டாள்தணமாகும்.

மேலும் எமது கட்சியின் ஊடாக பாலமுனை பிரதேசத்தில் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்பு தொடர்பாக அப்பட்டமான பொய்யினை விலகிய பிரதேச சபை உறுப்பினர் கூறியிருந்தார். பாலமுனை தேசிய காங்கிரஸ் மத்தய குழு பாலமுனையில் உள்ள இரண்டு வட்டாரங்களினதும் அமைப்பாளர்கள். உட்பட தற்போது கட்சியிலிருந்து விலகியதாக கூறுகின்ற குறித்த பிரதேச சபை உறுப்பினரின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடன்தான் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அது மாத்திரமன்றி கட்சியின் தலைமைத்துவம் தற்போது விலகியுள்ள நபருக்கு ஆறு மாத காலங்களுக்கு பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பதவியை கூட மற்றய உறுப்பினருக்கு வழங்காமல் அவர் அழித்த  வாக்குறுதிக்கு மாற்றமாக இன்று வரை அந்தப்பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்.  அவர் சரியான ஒரு அரசில்வாதி என்றால் நாகரீமான முறையில் எமது தேசிய காங்கிரஸ் கட்சியினால் வழங்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினமா செய்து விட்டு மாற்று கட்சியில் இணைந்து கொண்டிருக்க வேண்டும். அவர் அதனைக் கூட செய்யாமல் கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிப்பது முட்டாள்தனமாகும்.
தற்போது மாற்றுக் கட்சியில் இணைந்துள்ள சகோதர உறுப்பினர் இன்னுமொன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது எமது கிராமத்து மக்கள் அவருக்கு அழித்த  ஒவ்வொரு வாக்கும் அவருக்காக அழிக்கப்பட்ட வாக்குகள் அல்;;ல. தேசிய காங்கிரஸ் கட்சிக்காகவும் அதன் தலைமையின் சேவைக்கும் விசுவாசத்துக்கும் அழிக்கப்பட்ட வாக்குகளாகும். அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சிக்கும் துரோகமிளைத்து விட்டார். எனவே அவர் கட்சியிலிருந்து விலகுவதற்கு முன் எமது கட்சி ஆதரவாளர்களினால் வழங்கப்பட்ட அமாணிதத்தை கட்சியினால் வழங்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதே பொருத்தமாகும் என்றார்.
இந்நிகழ்வில் பாலமுனை தேசிய காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஏ.கே.றுமைஸ். குட்சியின் உயர்பீட உறுப்பினர் எஸ்.ரி.ஆதம்பாவா, கட்சியின் மத்ததிய குழு செயலாளர் ஏ.பி.நிஸ்பான், பொருளாளர் ஏ..எம்.றிஸ்மி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துn கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.