காத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் 18ம் திகதிவரை நீடிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்–
காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

கடந்த 31ம் திகதி அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டம் நாளை 15ம் திகதியுடன் நிறைவடையவிருந்ததுஎனினும் எதிர்வரும 18ம் திகதியே குறித்த தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் தொட்ர்பாக முடிவு செய்யபபடுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.தினமும் 100 முதல் 150பேருக்கு இப்பரிசோதனைகள் இடம்பெறுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்