முகநூல் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பு தொழிலதிபர் கைது.

தொழிலதிபர் ஒருவர் முகநூல் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அறிக்கைகளை வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இந்த மாதம் 18 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.. சந்தேகத்திற்குரியவர் பேஸ்புக்கில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார், துறவிகள் உட்பட பல்வேறு தரப்பினரை அவமதிக்கும் வகையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை அழிக்கும் வகையில்  கருத்துக்களை தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கீழ் அவர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பல வணிகங்கள் சரிந்த போதிலும் சந்தேக நபர் ஒரு பணக்காரனைப் போல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், சந்தேகத்திற்குரியவர் எந்தவொரு சட்டவிரோத வழிமுறைகளின் மூலமும் பணம் பெறுகிறாரா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.