மட்டில் 24 மணித்தியாலயங்களுக்குள் 24பேருக்கு தொற்று.மொத்தம் 420

பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 24 பேருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

காத்தான்குடி, ஆரையம்பதி சுகாதாரப்பிரிவில் தலா4பேரும்,வெல்லாவெளியில் 03பேரும், களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 12பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இன்றைய தரவின்படி மட்டுமாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 420 இதில் தொடர்ந்தும் 278பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என மேலும் தெரிவித்தார்.