அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில்

வி.சுகிர்தகுமார்

  கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில்; ஆர்வத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் அடை மழை வெள்ளப்பெருக்கு எனும் பலவிதமான கஸ்டமான சூழ்நிலைக்கு மத்தியில் தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு தொழிலாளர்களும் பொது மக்களும் தைமகளை வரவேற்பதற்காக தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகளில் மக்கள் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இம்முறை வழமைக்கு மாறாக குறைந்தளவான மக்கள் புத்தாடைக் கொள்வனவிலும் அத்தியாவசியப் பொருட் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

இதேநேரம் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்திலும் தைப்பொங்கலை கொண்டாட அங்குள்ள சிறுவர்கள் தயராகிவருவதை அவதானிக்க முடிந்தது.

அங்கிருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தாடைகளை வழங்கும் நிகழ்வும் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கால் அவதியுற்று கஸ்ட நிலையில் வாழும் மக்களின் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான உலர் உணவுப்பொதியினை பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆலையடிவேம்பில் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.