நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக சுரைக் காதர் பொறுப்பேற்பு.

பைஷல் இஸ்மாயில் –
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் சுரைக் காதர் இன்று (13) கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக இரு தினங்களுக்கு முன்னர் கடமை பொறுப்பேற்று கடமை புரிந்த டாக்டர் பறூசா நக்பர் மீண்டும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு சென்றுள்ளார்.
அக்கரைப்பற்றில் தான் கடமை புரிந்த காலத்தில் மீதமாகவுள்ள கொவிட்-19 மற்றும் டெங்கு கடமைகளை நிறைவு செய்யும் பொருட்டு அமைச்சின் உத்தரவிற்கு அமைவாக அவரை ஒரு மாத காலத்திற்கு மீண்டும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிவதற்கு கல்முனை சுகாதார வைத்திய அதிகாரியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் மீண்டும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றதுடன், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த டாக்டர் சுரைக் காதர் ஒரு மாத காலம் வரைக்கும் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக தற்காலிகமாக கடமையேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து கிழக்குமாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரனிடம் வினவியபோது அண்மையில் அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் அப்பிரதேச மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இவ்இடமாற்றம் தற்காலிக செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருசில மாதங்களுக்குள் சீர் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.