மட்டு போதனா வைத்தியசாலையில் 43832 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.1399 தொற்றாளர்கள்

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை43832 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பரிசோதனைகள் ஊடாக1399 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நுண்ணுரியியல் விசேட வைத்தியநிபுணர் டாக்டர் தேவகாந்தன்  நியமிக்கப்பட்டுள்ளார்.. கிழக்கு மாகாணத்திற்கான சகல பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் மாத்திரமே நடைபெறுவதுடன்.இப்பரிசோதனைகள் யாவும் மருத்துவ மனையின் ஆய்வுகூடத்தில் மருத்துவ ஆய்வுகூடதொழில்நுட்பவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.