அரசியலமைப்பின் படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால், அந்த நபரின் எம்பி பதவியை இழக்க நேரிடும். இதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறாயின் கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்குகளில் அடுத்த இடத்தில் இருக்கும் வேட்பாளருக்கு பாராளுமன்ற ஊறுப்பினராகும் சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த பொது தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியிற்கு 04 எம்பி பதவிகள் கிடைத்தது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 103,992 விருப்பு வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தார்..
தோல்வியுற்றவர்களில் அதிக வாக்குகளை பெற்றிருந்தத அஜித் மான்னப்பெருமவுக்கே பாராளுமன்ற உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.