அவுஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக கண்டன பேரனி

ஹஸ்பர் ஏ ஹலீம்,_
அவுஸ்திரேலியா சிட்னி நிவ் சவ்த் வேல்ஸ் (NSW)மானிலத்தில் இயங்கிவரும் (அவுஸ்ரேலியா இலங்கை முஸ்லிம் சம்மேளனம்) (ALMA) நிறுவாகத்தின் ஏற்பாட்டில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை  காலை 10:00am-3:00pmமணிவரை , இலங்கை முஸ்லிம்களின் COVID-19 காரணமாக உயிரிழக்கும்  ஜனாஸாக்களை எரிக்கப்படுவதற்கு எதிர்பை தெரிவித்து அவுஸ்ரேலியா வாழ் இலங்கை முஸ்லிம் என்ற வகையில் அமைதியான முறையிலும் சகோதர உணர்வுகளுடன்  கண்டன வாகன பேரனியும் துஆப் பிராத்தனையுடன் இடம் பெற்றது.

இதில் பெரும்பாலான அவுஸ்திரேலிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றார்கள் வாகன ஊர்வலம் மூலமாக ஜனாசா எரிப்புக்கு எதிராக ஒவ்வொருவரும் வாகனங்களில் ஜனாசா எரிப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டார்கள்.