அம்பாரை மாவட்டத்தில் ஹர்த்தால் பிசுபிசுத்தது.

வி.சுகிர்தகுமார்

யாழ் பல்கலைக்கழக சம்பவத்தினை தொடர்ந்து அனைத்து தமிழ்க்கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கான அழைப்பினை இன்று வடகிழக்கு முழுவதும் விடுத்த பொழுதிலும் அம்பாரை மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படாத நிலையினை காண முடிந்ததுடன் ஹர்த்தால் பிசுபிசுத்ததும் போனது.
குறிப்பாக அக்கரைப்பற்று திருக்கோவில்; போன்ற பிரதேசத்திலும் இன்று வழமையான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டதை காண முடிந்தது.
அரச திணைக்களங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் போன்ற அனைத்து நிறுவனங்களும் தமது அன்றாட செயற்பாட்டை முன்னெடுத்ததுடன் வியாபார நிலையங்களும் திறந்திருந்தன.
இதேநேரம் போக்குவரத்து நடவடிக்கைகளும் வழமையான முறையில் இடம்பெற்றது.
மேலும் மக்கள் தைப்பொங்கலுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டதுடன் தமது அன்றாட செய்பாடுகளையும்; வழமைபோன்று முன்னெடுத்ததை காண முடிந்தது.