ரூபா  71000 பெறுமதியான தேங்காய்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் கைது.

இக்பால் அலி
ரூபா  71000 பெறுமதியான தேங்காய்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் குடா கல்கமுவ பிரதேசத்தில் இரு வீடுகளில் இருந்து ரூபா 71000 பெறுமதியான தேங்காய்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  ஆறு சந்தேக நபர்கள் கிரிபாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் குடா கல்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 21 , 22 வயதுடையவர்களுடன் விசேடமாக 13 வயதுடைய பாடசாலை செல்லும்  மாணவர்களும் உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொள்ளையிட்ட தேங்காய்கள் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டதுடன் அந்த கொள்ளைக் சம்பவவத்திற்காகப் பயன்படுத்திய சிவப்பு நிற சிறிய ரக லொரியுடன் 06 சந்தேக நபர்களும் குருநாகல் மஜிஸ்ரேட் நீவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.