கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின்

ஹிஜ்ராா வீதியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி.
எப்.முபாரக் 
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின் ஹிஜ்ராா வீதியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர்  தெரிவித்தார்.

அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், நேற்று (9) இரவு அதே வீதியில் மூவர் கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலே, இந்த தொற்றாளர்களோடு முதல் நிலை உறவினர்கள் 11 பேரை அவசரமாக அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இன்று(10) இவர்கள் இனங்காணப்பட்டனர். ஏனைய 6 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பபடவில்லை. இதனால் இவர்களின் இரத்த மாதிரி பெற்று, PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வீதியில், நேற்றும் இன்றும்  8 பேர் எங்களால் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட அதேவேளை, ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்த மேலும் ஒருவர்   எமது பிரதேசத்துக்கு வெளியில் இனங்காணப்பட்டிருக்கிறார்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது அலைக்குப் பின்னர் மொத்தமாக 28 பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.